News Just In

8/18/2026 03:59:00 PM

மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி

மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி



மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் முகமாக சுகாதாரத் திணைக்களம் சுகாதார விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விழித்தெழுவோம் தலசீமியா நோயற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் கருப்பொருளுக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி செவ்வாய்கிழமை(18.08.2026) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமாகி நகரின் பிரதான வீதிகளூடாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் வரை சென்றடைந்தது

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர்.ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்வு இடம்பெற்றது.

நம்பிக்கையுடன் நடப்போம் ஒரு உயிரை காப்போம் என்ற கருத்தை சமூகத்துக்கு தெரிவிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் இந்த நோயின் தாக்கத்திலிருந்து சமூகத்தை பாதுகாக்கும் பதாகைகளை ஏந்திய வண்ணம் இந்த விழிப்புணர்வு பேரணி முண்ணெடுக்கப்பட்டிருந்தது.

பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் தொற்றா நோய் பிரிவுக்கு பொறுப்பான வைத்தியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதாரத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மதத் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டிருந்தது

No comments: