News Just In

8/18/2026 09:21:00 AM

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத தெரிவித்துள்ளார்.

நிறுவனக் கோவை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஒழுக்காற்று விதிகளை மீறி, பொது முகாமையாளர் பல தீவிரமான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வேதனத்துடன் கூடிய கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அவர், விடுமுறைக் காலத்தில் அதிகாரசபையின் எந்தவொரு அலுவலகம் அல்லது பணித்தளங்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தலைவரின் முன்அனுமதி இன்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பொது முகாமையாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

No comments: