நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எனது நிர்வாக அதிகாரமோ அல்லது எங்களிடம் உள்ள எந்த அதிகாரமோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப்படாது.
அரசியலமைப்பில் மாற்றம்
அரசியலமைப்புத் திருத்தங்களின் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி பதவி விலக வேண்டியிருந்தது. நீங்களும் பதவி விலக வேண்டியிருக்கும் என சட்டத்தரணிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
நான் பதவி விலகத் தயாராகவே உள்ளேன். மக்களின் ஆணையை மீறி ஆட்சியில் இருக்க ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆபத்தை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆபத்துக்கள் இல்லாமல் மாற்றம் நிகழும் என்று நான் நினைக்கவில்லை. மாற்றம் எப்போதும் ஆபத்துக்களுடன் ஏற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது.
இதன்போது நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.
இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மட்டுமே இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும்.
அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments: