News Just In

8/10/2026 03:04:00 PM

யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சை வேலி அமைத்தல்"

யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சை வேலி அமைத்தல்"


2017 இல் இருந்தே யானை மனித மோதலுக்கான தீர்வாக கருவிகளை உருவாக்கும் ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினேன். யானைகளுக்குப் பிடிக்காத அதிக அதிர்வெண் கொண்ட ஒலிகள் எழுப்பும் கருவிகள் மற்றும் அதி வேகமுடைய ஒளியை வெளியிட்டு யானைகளின் திசையைத் திருப்பும் கருவிகளைச் செய்தேன். ( ஏற்கனவே உள்ளவற்றில் செலவு குறைந்த முறையில் எமது நாட்டுக்கேற்ற வடிவமைப்பில்) அவ்வாறு செய்த 6 கருவிகள் சிறப்பாகச் செயற்பட்டது.எனினும் அது யானைகளைத் துன்புருத்துவதை நான் கொஞ்சமும் விரும்பவில்லை.

உலகில் இயற்கையான முறையில் யானைகளை விரட்டுவதற்கான ஆய்வுகளைத் தேட ஆரம்பித்தேன். அந்த ஒவ்வொரு முறைகளையும் எமது இலங்கையில் அதிக யானைகள் வாழும் இடங்களில் பரிசோதனை தொடர்ச்சியாக பரிசோதனைகள் செய்து கொண்டே இருந்தேன்.

இலகுவான தீர்வு :

அதில் தேனீ வளர்ப்பு மற்றும் எலுமிச்சை வேலி அமைத்தல் நல்ல முறையில் பாதுகாப்பு உத்திகளாக அமைந்தன. அதிலும் எலுமிச்சை வேலி மிகச் சிறப்பான முடிவுகளைத் தந்திருந்தது. தற்போது 3 வரிசையில் வேலியமைப்புப் படி 7 கிலோ மீற்றருக்கு வேலிகளை அமைத்துள்ளோம். தற்போது பல இடங்களில் இருந்து இத்திட்டத்திற்கான வேலைகள் வந்து கொண்டிருக்கின்றன.

யானைகளுக்கு எலுமிச்சையின் வாசனை மற்றும் அதன் முட்கள் பிடிக்காது.

1. எலுமிச்சை வேலியை எவ்வாறு அமைப்பது ?

ஒரு செடிக்கும் அடுத்த செடிக்கும் இடையில் 2 முதல் 3 அடி இடைவெளி இருக்க வேண்டும். 3 வரிசைகளில் (Rows) எலுமிச்சை செடிகளை நட வேண்டும். ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் இடையில் 3 அடி இடைவெளி விட்டு, செடிகளை "ஜிங்-ஜாக்" (Zig-Zag) முறையில் நட வேண்டும். இது வேலி அடர்த்தியாக வளர உதவும்

2. எவ்வாறு தொடர்ச்சியாக பராமரிப்பது ?
செடிகள் நன்கு வளரும் வரை (முக்கியமாக முதல் 1-2 ஆண்டுகள்) வழக்கமான நீர் பாசனம் மற்றும் கத்தரித்தல் (Pruning) அவசியம். எலுமிச்சை செடிகள் வளர்ந்து முழுமையான வேலியாக மாற 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். அதுவரை தற்காலிகப் பாதுகாப்பு தேவைப்படலாம். வறட்சியான காலங்களில் செடிகள் காய்ந்துவிடாமல் பாதுகாக்க நீர் மேலாண்மை சரியாக இருக்க வேண்டும்.

3. இந்த முறையில் உள்ள மிகப்பெரிய நன்மைகள் ?
மின்சார வேலி (Electric fence) அல்லது அகழிகள் (Trenches) அமைப்பதை விட இதற்கு செலவு மிகக் குறைவு. வேலி பாதுகாப்பு தருவதோடு மட்டுமின்றி, எலுமிச்சை பழங்களை விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். எலுமிச்சை மரங்கள் பல ஆண்டுகள் வாழக்கூடியவை என்பதால், இது ஒரு நிரந்தர பாதுகாப்பை வழங்கும்.இது யானைகளுக்கு எந்தவித உடலிரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், அவற்றை விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்கும் ஒரு மனிதாபிமான முறையாகும்.

எமது நாட்டின் காடுகளை உருவாக்கி மழைவீழ்ச்சியைக் கொண்டுவருவதில் யானைகளின் பங்களிப்பு மிகப் பெரியது. யானைகள் மட்டுமன்றி பிற விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பது இந்த அழகிய குட்டித்தீவில் பிறந்த நமது ஒவ்வொருவருடைய கட்டாய கடமையாகும். இப்பூமி அனைத்து உயிர்களுக்குமானது.

தற்போது Lime Projects மூலம் எமது Invent of Minds (Pvt) Ltd இலாபமீட்டி வருகின்றது. நீங்களும் இதனைச் செய்யலாம். இதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் இலவசமாக வழங்கப்படும்.

S Vinoj Kumar
Managing Director at Invent Of Minds (Pvt) Ltd
Sri Lanka.
0773867722

No comments: