பல்லேகலை - தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து 5,196 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைதி தனது ஆசனவாயில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பிலேயே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறைக்குள் இருக்கும் இந்த நபருக்கு 'ஐஸ்' போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: