News Just In

8/03/2026 09:54:00 AM

அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 20 பேர் காயம்

அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 20 பேர் காயம்


இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும், திகணையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று காலை 6:15 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கேகாலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: