எனது மகனோடு தொலைபேசியில் பேச 03,மணி நேரத்தை ஒதுக்கி தாருங்கள் பிள்ளையானின் தாய் வேண்டுகோள்.
இம்மாதம் 18/08/2026, வரை விளக்கமறியலில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (04/08/2026) உத்தரவிட்டது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ. தர்சினி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, சந்திரகாந்தன் நிகழ்நிலை (வீடியோ) ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
முக்கிய கோரிக்கைகளும் வாதங்களும்
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு (75 வயது) காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் தாயார், தனது மகனுடன் தொலைபேசியில் பேசுவதற்காக 2 அல்லது 3 நிமிட நேர அவகாசத்தை வழங்குமாறுபிள்ளையான் சட்டத்தரணிகள் நேற்று மன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்
சிறைச்சாலைக்கு வெளியே இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப் பொதி திகளை கடற்படையினரும் (Navy) தரைப்படையினரும் (Army) தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே உள்ளே அனுப்புகின்றனர். இதனால் உணவு பழுதடைவதாகவும், அதனை உட்கொள்ள முடியாத நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் உள்ள நிலையான நடைமுறைகளைப் பின்பற்றி, கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளைச் சரியாகச் செயல்படுத்தும்படி நீதிபதி கோரிக்கை விடுத்தார்.
சிவநேசதுரை சந்திரகாந்தனை மட்டக்களப்புப் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு தொடர்பாக கடைசி நேரத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், சட்டரீதியாகச் சாத்தியமா என்பது குறித்துச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முறையான ஆலோசனை கோரப்பட்ட்ட பின்னரே இதற்கான முடிவு அறிவிக்கலாம் என கூறப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் அவருக்குப் பாதுகாப்பு இல்லை எனத் எதிர் தரப்பால் வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அங்கு அவருக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்புகளும் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதுவொரு பாதுகாப்பான சிறைச்சாலை என்றும் நீதிமன்றத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
No comments: