News Just In

7/31/2026 06:24:00 PM

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு


மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் விலை 495 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் விலை 478 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்
.

No comments: