News Just In

7/11/2026 09:53:00 AM

கடலில் ‘வலை' மூலம் ராக்கெட்டை பத்திரமாக மீட்டு அசத்தல்: விண்வெளித்துறையில் சீனா புதிய சாதனை

கடலில் ‘வலை' மூலம் ராக்கெட்டை பத்திரமாக மீட்டு அசத்தல்: விண்வெளித்துறையில் சீனா புதிய சாதனை



வானில் இருந்து திரும்பிய லாங் மார்ச்-10பி ராக்கெட், கடலில் உள்ள தளத்தில் வலை மூலம் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது.விண்​வெளி ஆராய்ச்​சிக்கான செல​வு​களைக் குறைக்க, விண்ணில் ஏவப்​படும் ராக்​கெட்​டு​களை மீண்​டும் பயன்​படுத்​தும் தொழில்​நுட்​பத்தை உலக நாடு​கள் தீவிர​மாக உரு​வாக்கி வரு​கின்​றன.

அமெரிக்​கா​வின் ‘ஸ்​பேஸ் எக்​ஸ்’ நிறு​வனம் தனது ‘பால்​கன் 9’ ராக்​கெட்​டுகளைக் கடலில் உள்ள தரை தளத்​தில் செங்​குத்​தாகத் தரை​யிறக்கி சாதனை படைத்​துள்ளது. ஆனால், சீனா தரைத்​தளத்​திற்​குப் பதிலாக, அதிநவீன வலைபோன்ற அமைப்​பைப் பயன்​படுத்தி கடலில் ராக்​கெட்​டைப் பிடித்து புதிய விண்​வெளிப் போட்​டியைத் தொடங்​கி​யுள்ளது.

சீன விண்​வெளி அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கழகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யின்​படி, “ஹாய்​னான் வணிக விண்​வெளி ஏவுதளத்​திலிருந்து ‘லாங் மார்ச்​-10ஏ’ என்ற ராக்​கெட் வெற்​றிகர​மாக விண்​ணில் செலுத்​தப்​பட்​டது. ராக்​கெட் ஏவப்​பட்ட ஆறு நிமிடங்​களில், அதன் முதல் மற்​றும் இரண்​டாம் பகு​தி​கள் தனித்​தனி​யாகப் பிரிந்​தன.

அதைத் தொடர்ந்​து, பூமியை நோக்கி வந்த ராக்​கெட்​டின் முதல் பகுதி பூஸ்​டர், கட்​டுப்​பாட்​டுடன் செங்​குத்​தாகக் கீழ்​நோக்கி இறங்​கி, பிறகு கடலில் நிறுத்தப்​பட்​டிருந்த மீட்​புத் தளத்​தில் இருந்த வலை​யமைப்​பிற்​குள் மிக துல்​லிய​மாக இறங்கியதை தொடர்ந்து பத்​திர​மாக மீட்​கப்​பட்​டது.

வழக்​க​மான ராக்​கெட்​டு​கள் விண்​வெளி​யில் செயற்​கைக்​கோள்​களை நிலைநிறுத்​திய பின், கடலில் விழுந்து அழிந்​து​விடும் அல்​லது விண்​வெளிக் குப்​பை​யாக மாறி​விடும்.ஆனால்,மீண்​டும் பயன்​படுத்தக்​கூடிய இந்த பூஸ்டர்கள் பாதுகாப்​பாக மீட்​கப்​பட்​டு, சிறிய பழுது​பார்ப்​பு​களுக்​குப் பின் அடுத்​தடுத்த விண்​வெளித் திட்​டங்​களுக்​குப் பயன்​படுத்​தப்​படும். இதனால் செலவு குறை​யும்​” என்​று கூறப்​பட்​டுள்​ளது.

No comments: