News Just In

7/31/2026 08:01:00 AM

இரத்தினபுரி பாடசாலை ஒன்றை உலுக்கிய சம்பத்தால் அதிர்ச்சியில் பெற்றோர் - மாணவ குழுவால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

இரத்தினபுரி பாடசாலை ஒன்றை  உலுக்கிய சம்பத்தால் அதிர்ச்சியில் பெற்றோர் - மாணவ குழுவால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை



இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்கள், அதே வகுப்பை சேர்ந்த மாணவியை கடுமையான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த 5 மாணவர்களும் குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களான மாணவர்களில் இருவரை 28 நாட்களுக்கு சிறுவர் நல்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், ஏனைய மூன்று மாணவர்களையும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தகாத செயற்பாட்டுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய குருவிட்ட பொலிஸார் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் குறித்த மாணவர்கள் குழு கைது செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 5 மாணவர்களில் இருவரும் மாணவியுடன் கடுமையான முறையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய 3 மாணவர்களும் அதற்கு உதவி மற்றும் உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: