News Just In

7/27/2026 06:20:00 AM

மட்டு லயன்ஸ் கழகத்தின் 'நாங்கள் சேவை செய்கிறோம்' எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டு லயன்ஸ் கழகத்தின் 'நாங்கள் சேவை செய்கிறோம்' எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்


மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் நாங்கள் சேவை செய்கிறோம் எனும் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய வவுணதீவு பன்சேனை கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் சனிக்கிழமை (25) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஞா. நவீகரன் PMJF. PMAF தலைமையில் பன்சேனை ஆரம்ப மருத்துவ சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர் லயன் யி.ஷாஹிர் அஹமது Pஆது Pஆயுகு. முதல் துணை மாவட்ட ஆளுநர் லயன் ரி. ஆதித்தன் PMJF. PMAF, மாவட்ட ஆளுநர் சபை அதிகாரிகள், பல லயன்ஸ் கழகங்களின் தலைவர்கள், கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு மங்கள விக்கேற்றி சம்பிராய பூர்வமாக மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தனர்

இந்த இலவச மருத்துவ முகாமில் நடமாடும் பல் சிகிச்சை கூடம், மருத்துவ ஆலோசனைகள், ஆய்வக பரிசோதனைகள் இடம்பெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவையை பெற்றனர் இவர்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

மேலும் கண்டறிக
செய்தி சந்தா
உலக செய்திகள்
Travel Guides & Travelogues


இந்த இலவச மருத்துவ முகாமிற்கு மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன், வவுணதீவு பிரதேச செயலாளர், வைத்தியர்கள், கிராம அலுவலர், பொது சுகாதார பரிசோதகர் நடமாடும் பல் மருத்துவ சேவைப் பிரிவு, சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பல சமூக அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கினர்.

No comments: