முன்னாள் புலனாய்வு சேவையின் பிரதானி சுரேஷ் சலே, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை அவர் ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில், அவர் தமது உண்ணாவிரதத்தைத் தொடங்கியதில் இருந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், தற்போது தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக சுரேஷ் சலே தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சிஐடி தடுப்புக்காவலில் இருந்து தன்னை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி அவர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
No comments: