(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேரணிகள் மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகே வந்தடைந்;து, அங்கிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரதான அரங்கிற்கு பண்ட் பாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டு விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.
மாணவர்களின் அழகிய வரவேற்பு நடனத்துடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.காந்தி பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக விசேட கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு திருமாவட்ட சபையின் அங்கமான, மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையின் மட்டக்களப்பு நகர், செங்கலடி பிராந்திய திருச்சபை மக்கள் இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் பேராயர் அருட்பணி எம்.டீ.கிங்ஸ்லி வீரசிங்க விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இரா.சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்,மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்
No comments: