News Just In

7/27/2026 06:28:00 PM

இலங்கையை ஆட்டிப் படைக்கும் மறைகரம்..! அநுரவை விட பலம்பொருந்திய மர்ம நபர்

இலங்கையை ஆட்டிப் படைக்கும் மறைகரம்..! அநுரவை விட பலம்பொருந்திய மர்ம நபர்



இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை விட பாதாள உலகம் குழு தலைவர் கஞ்சி பானை இம்ரான் செல்வாக்கு மிக்கவர் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்கள் அநுரகுமார திசாநாயக்கவிற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வழங்கிய போதிலும் தற்பொழுது நாட்டை ஆள்பவர்கள் வேறும் மூன்று நபர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபி கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரான் ஆகியோரே நாட்டை ஆட்சி செய்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் போர்த்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலங்களிலும் பௌத்த பெரஹர நிகழ்வுகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதில் தலையீடு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்பொழுது பெரஹரா ஒன்றில் எவ்வாறான அங்கங்களை உள்ளடக்க வேண்டும் என்பதனை பௌத்தர் அல்லாத ஒருவர் தீர்மானிக்கும் அளவிற்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.
தலதா மாளிகை பெரஹரா நிகழ்வில் ஏற்படவுள்ள மாற்றம்

இரண்டு பௌர்ணமி தினங்களில் பாதாள உலகக் குழுக்களை இல்லாது ஒழிப்பதாக கூறிய நபர் ஒருவரது வார்த்தைகளை நம்பி மக்கள் வாக்களித்தனர்.

எனினும் உண்மையில் தற்பொழுது நாட்டை ஆட்சி செய்பவர் அநுர குமார திஸாநாயக்க அல்ல வேறு மூவர் என்பது தற்பொழுது மக்களுக்கு புரிந்துள்ளது என தெரிவித்துள்ளார். தற்பொழுது பௌத்த பெரஹர நிகழ்வு ஒன்றில் காவடி நடனத்தை உள்ளடக்குவதா இல்லையா என்பதை கஞ்சிபானி இம்ரானே தீர்மானிக்கின்றார் என அவர் சுட்டிக்காட்டிவுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இதுவரையில் பௌத்த பெரஹரா நிகழ்வு ஒன்றில் என்னென்ன அங்கங்கள் உள்ளடக்க வேண்டும் என பௌத்தர் அல்லாத ஒருவர் தீர்மானிக்கும் சந்தர்ப்பம் இதுவே ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தால் தலதா மாளிகை பெரஹரா நிகழ்விலும் மாற்றங்களை செய்யக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக உதய கம்மன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments: