
தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தை சேர்ந்த சுமார் 35 துறவிகள், தலைநகர் பாங்காக் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவில் நேற்று புனிதப் பயணத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது 11 வயது சிறுவன் ஓட்டி வந்த டிரக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 5 துறவிகள் அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பல துறவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு 8 ஆக உயர்ந்தது.
தற்போது 14 துறவிகள் சிகிச்சையில் இருப்பதாக மாகாண ஆளுநர் வொராயன் பூன்னாரத் தெரிவித்தார். விபத்தில் தப்பிய துறவிகளில் ஒருவர் கூறுகையில், “அந்த வாகனம் திடீரென நிலை தடுமாறி, சாலையில் இருந்து விலகி வந்து எங்கள் கூட்டத்தின் மீது மோதியது” என்றார். உள்ளூர் போலீஸார் கூறுகையில், “விபத்தை ஏற்படுத்திய சிறுவன் தற்போது போலீஸ் காவலில் இருக்கிறார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.
No comments: