News Just In

7/03/2026 07:46:00 PM

இம்முறை கதிர்காம காட்டுப்பாதை ஜூலை 10 இல் திறக்கப்படும்!

இம்முறை கதிர்காம காட்டுப்பாதை ஜூலை 10 இல் திறக்கப்படும்! மொனராகலை அரச அதிபர் நிஷாந்த


கதிர்காம காட்டுப்பாதை ஜூலை 10 இல் திறக்கப்படும்! மொனராகலை அரச அதிபர் நிஷாந்த இம்முறை யாத்திரை நடைமுறை இறுக்கமாக இருக்கும்என்கிறார் மொனராகலை அரச அதிபர் நிஷாந்த

இதுவரைகதிர்காமத்தில்இருகூட்டங்களைநடாத்தியுள்ளோம்.காட்டுப்
பாதை 10 இல் திறக்கப்படும்.24ஆ ம் திகதி பூட்டப்படும். அங்குபொலித்தீன் பிளாஸ்டிக் முற்றாகவே தடைசெய்யப்படும்என்று மொனராகலை அரச அதிபர் ஏஜி.நிஷாந்த அறிவிக்கிறார்.

கதிர்காமம் பாதயாத்திரை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்..இம்முறை பாதயாத்திரை சட்டதிட்டங்கள் மிகவும் இறுக்கமாக இருக்கும். மீறினால் நீதிமன்றத்தில் நிற்க வேண்டி ஏற்படும்.
வடக்கில் இருந்து பாதயாத்திரை வரும் அடியார்கள் உகந்தயிலிருந்து காட்டுப் பாதையில் பயணிப்பீர்கள்.நிறைய வன விலங்குகள் உள்ளன.அவைகள் தாக்கலாம். எனவே தங்களின் பாதையில் மாத்திரம் பயணிக்க வேண்டும் என்றார்.

அதேவேளை வனஜீவராசிகள் திணைக்கள யால பிரிவு பொறுப்பதிகாரி இந்திரஜித் கூறுகையில்:காட்டுவழியாக பாதயாத்திரை செல்வோரின் பாதுகாப்பு கருதி சில நடைமுறைகளை அறிவிக்கிறோம்.
மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
அதைத்தாண்டி பாதையை தாண்டி நேரம் தப்பி பயணம் மேற்கொண்டால் வன விலங்குகளின் தாக்குதல் இடம்பெறலாம். அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே குறிப்பிட்ட நேரத்திற்கு அப்பால் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒன்று அல்லது இரண்டு பிளாஸ்டிக் பாட்டில்களை மாத்திரம் குடிநீருக்காக எடுத்து வர அனுமதி வழங்கப்படும். ஆனால் வழியில் எறியமுடியாது.பொலீத்தீன் முற்றாகவே தடைசெய்யப்பட்டுள்ளது.
மாணிக்கங்கையில் சில இடங்களில் முதலைகள் உள்ளன. பாதுகாப்பு போடப்படும். அதைத் தவிர்த்து ஏனைய இடங்களில் பக்தர்கள் நீராடலாம்
புத்தல கதிர்காமம் வீதியால் வாகனங்களில் வருவோரிடம் யானை உணவுக்காக வரலாம். அங்குள்ள அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவும்.என்றார்.

No comments: