News Just In

6/03/2026 06:56:00 AM

புகைத்தல் தடை செய்யப்பட்ட வலயமாக மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகம்!

புகைத்தல் தடை செய்யப்பட்ட வலயமாக மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகம்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகம் புகைத்தலுக்குத் தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலக வளாக நுழைவாயில் முகப்பில் "சிகரட் நாற்றமில்லாத பகுதிக்கு உங்களை நாம் வரவேற்கிறோம்" என்ற பெரிய அறிவிப்பு தொங்கவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலக வளாகத்தை புகைத்தலுக்கு தடை செய்யப்பட்ட வலயமாக மாவட்டச் செயலாளர் ஜே.எஸ் அருள்ராஜ் பிரகடனப்படுத்தினார்.

நிகழ்வில் புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள், புற்றுநோய், இதய நோய்கள், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிரேஸ்ட சாரண மாணவி மதிவண்ணன் ஸ்ருதிகா துண்டுப் பிரசுரங்களை வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகம் புகைத்தலுக்குத் தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை புகைத்தலுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் பாராட்டுகின்றனர்.

இந்த முன்மாதிரியை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய அரச அலுலவலகங்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவையும் பின்பற்றி புகைத்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றனர். குறிப்பாக பிரதேசே செயலகங்கள் உள்ளுராட்சிச் சபைகள் வைத்தியசாலைகள் உடனடியாக இதை அமுலுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் செயற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


No comments: