கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக, கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக சாய்ந்தமருது முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம், அல் ஹாபிழ் அல்-ஆலிம் உஸாமா பரீட் (ஸஹ்தி) அவர்கள் கலந்துகொண்டு, இஸ்லாமிய புத்தாண்டின் வரலாறு, அதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் விசேட அதிதியாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், கிழக்கு மாகாண கணனி தகவல் தொழில்நுட்ப பேரவையின் பணிப்பாளருமான யூ.எல். நூருல் ஹுதா உமர் அவர்கள் கலந்து கொண்டார். மேலும், பாடசாலை பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதீம், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை முன்னிட்டு மாணவர்களின் பல்வேறு இஸ்லாமிய கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அண்மையில் நடைபெற்ற கணித வினா-விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் திறமைகள் மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு பங்கேற்பாளர்களின் பாராட்டைப் பெற்றது.
No comments: