News Just In

6/20/2026 03:33:00 PM

கிழக்கு ஆளுநரால் மாகாண சுதேச மருத்துவ களஞ்சியசாலைக்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

கிழக்கு ஆளுநரால் மாகாண சுதேச மருத்துவ களஞ்சியசாலைக்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ உற்பத்தி திணைக்களத்தினால் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 30 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர நாட்டி வைத்தார்.

மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் அலியார் நஃபில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ். மோகனகுமார் மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், சுதேச வைத்தியர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments: