மட்டக்களப்பு மாவட்டத்தில் டித்வா புயல் இடரினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிறிய இறால் பண்ணையாளர்களுக்கு தடைப்பட்டுள்ள அவர்களது தொழில் முயற்சியியை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இழப்பீடு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்கும் நிகழ்வு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில், மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜின் ஒருங்கிணைப்பில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றது.
இழப்பீடு வழங்கும் நிகழ்வு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில், மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜின் ஒருங்கிணைப்பில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றது.
கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இழப்பீட்டு நிவாரண காசோலைகளை இறால் பண்ணையாளர்களுக்கு வழங்கி வைத்தார்.
டித்வா புயல் தாக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சிறிய இறால் பண்ணையாளர்கள் 35 பேருக்கு 9.55 மில்லியன் ரூபாய் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
தமது தொழில் முயற்சிகளை மீளக் கட்டி எழுப்பும் நோக்கில் பகிர்ந்தளிக்கப்பட்ட இந்த உதவு தொகை தமக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறிய இறால் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
No comments: