News Just In

6/21/2026 10:37:00 AM

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்




லெபனான் மீது இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி வரு​வது, அமைதி ஒப்​பந்த விதி​மீறல் என்​ப​தால் ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடு​வ​தாக ஈரான் அறி​வித்​துள்​ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த 2 மாதங்​களுக்கு மேலாக நீடித்து வந்த அமைதி ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை கடந்த வெள்​ளிக்​கிழமை முடிவுக்கு வந்​தது. இருதரப்பு இடையே ஏற்​பட்ட அமைதி ஒப்​பந்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான் ஆகியோர் கையெழுத்​திட்​டனர்.

அமைதி ஒப்​பந்​தத்​தில் 14 அம்​சங்​கள் இடம்​பெற்​றிருந்​தன. இதையடுத்து ஹார்​முஸ் ஜலசந்தி திறக்​கப்​பட்டு கப்​பல் போக்​கு​வரத்து தொடங்​கியது. அடுத்த 60 நாட்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்​கும் கப்​பல்​களுக்கு கட்​ட​ணம் வசூலிக்க மாட்​டோம். அதன்​பிறகு கட்​ட​ணம் வசூலிப்​போம் என்று ஈரான் கூறி வரு​கிறது.
மேலும், ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யும் தனது முற்​றுகையை படிப்​படி​யாக விலக்கி கொள்ள முன்​வந்​தது. இதையடுத்து கச்சா எண்​ணெய் கப்​பல்​கள் ஈரான் துறை​முகம் செல்ல அனு​மதி அளிக்​கப்​பட்​டது.

இதனால் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் இயல்பு நிலை திரும்பி கப்​பல் போக்​கு​வரத்து தொடங்​கியது. இந்​நிலை​யில் லெப​னான் மீது இஸ்​ரேல் படை நேற்று திடீர் தாக்​குதல் நடத்​தி​யது.

அமைதி ஒப்​பந்​தத்​தில் லெப​னான் உட்பட அனைத்து முனை​களி​லும் போர் நிறுத்​தம் உடனடி​யாக அமல்​படுத்​தப்பட வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதை மீறி லெப​னான் மீது இஸ்​ரேல் நேற்று தாக்​குதல் நடத்​தி​யது, ஒப்​பந்த விதி​முறை மீறல் எனக் கூறிய ஈரான், இதற்கு பதிலடி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடு​வ​தாக அறி​வித்​தது.

ஈரான் அரசு விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘அமைதி ஒப்​பந்த விதி​முறை மீறலுக்கு முதல் நடவடிக்​கை​யாக ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டுள்​ளது. விதி​முறை மீறல் தொடர்ந்​தால் மேல் நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்’’ என எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்து அமெரிக்கா மற்றும் ஈரான் குழுவினர் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

No comments: