News Just In

6/30/2026 04:31:00 PM

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் அதிகாலை வேளையில் அதிவேகமாகச் சென்ற இளைஞன் பலி!

ஏறாவூர் பொலிஸ் பிரிவில்அதிகாலை வேளையில் அதிவேகமாகச் சென்ற இளைஞன் பலி


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்ற 17 வயது இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு பனை மரங்களிலும், வேலியை ஊடறுத்தும், கொங்கிறீற் தூணை தகர்த்துக் கொண்டும் மோதுண்டு ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணியளவில் மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி வீதி வளைவில் இடம்பெற்றுள்ளது.

சவுக்கடிப் பக்கமிருந்து அதிவேகமாக சீறிக் கொண்டு வரும் மோட்டார் சைக்கிள் வீதியின் வளைவில் வளையாமல் சென்று கண்ணமைக்கும் நேரத்தில் நேரே பனைமரங்களில் மோதும் காணொளி அவ்விடத்தில் இருந்த சீசீரீவி கமெராவில்; பதிவாகியுள்ளது.

இந்த இளைஞன் அந்த அதிகாலை வேளையில் தனது நண்பர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை இரவலாகப் பெற்றுக் கொண்டு அதழிவேகமாக ஆறுமுகத்தான்குடியிருப்புப் பக்கம் நோக்கி தனியாகவே பயணித்துள்ளார்.

இவ்விதம் சுயமாக விபத்தில் சிக்கி பலியானவர் மீராகேணி மையித்துப் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த கபீர் முஹம்மட் ஆதில் (வயது 17) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் போக்குவரத்துப் பொலிஸாரால் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
.

No comments: