News Just In

6/30/2026 11:17:00 AM

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட வெங்கட நாராயணனை நீக்க திமுக வலியுறுத்தல்

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட வெங்கட நாராயணனை நீக்க திமுக வலியுறுத்தல்



திமுக வர்த்தக அணி செய​லா​ளர் காசி முத்​து​மாணிக்கம்​வெளி​யிட்ட அறிக்​கை: கன்னட பட தயாரிப்​பாளர் வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிர​தி​நி​தி​யாக நியமிக்​கலாமா என்று கேட்​டால், திரு​நாவுக்​கரசரை மத்​திய பிரதேசத்​தில் இருந்து எம்பி ஆக்​க​வில்​லையா என்​கிறார் அமைச்​சர் செங்​கோட்​டையன்.

நாடாளு​மன்ற உறுப்​பின​ராக இந்​தி​யர் ஒரு​வர் இந்​தி​யா​வில் எங்​கும் நிற்​கலாம். சட்​டப்​பேர​வைவைக்கு அந்த மாநிலத்​துக்​குள் வாக்​காள​ராக இருக்க வேண்​டும் என்​பதும், கவுன்​சிலருக்கு அந்த வார்​டிலேயே வாக்​காள​ராக இருக்க வேண்​டும் என்​பதும் கூடவா செங்​கோட்​டையனுக்கு தெரி​யாது.

டெல்லியில் தானே வேலை செய்​வார் என்​கிறார் அமைச்​சர் நிர்​மல்​கு​மார். டெல்​லி​யில் உள்​ளவர்​களுக்​காக வேலை செய்​யப் போகிறா​ரா? தமிழர்​களுக்​காகத் தானே பேசப்​போகிறார்.

அப்​படி​யென்​றால், கோட்​டை​யில் அறை​யும், தேசி​யக் கொடி​யும், காரும் அவருக்கு இல்​லை​யா? இது சின்ன பதவி பெரிதுபடுத்த வேண்​டாம் என்​கிறார் அமைச்​சர்.

இது சின்ன பதவி என்​றால், அமைச்​சர் அந்​தஸ்து எதற்​கு? அதி​முக​வில் இருந்து தவெக​வில் இணைந்த முன்​னாள் அமைச்​சர்​களில் ஒரு​வரையோ, புதிய படித்த தமிழரையோ நியமிக்​கலாம். வெங்கட நா​ராயணனை நீக்​கலாம் என தெரி​வித்​துள்​ளார்​.

No comments: