News Just In

6/18/2026 11:36:00 AM

முடிவுக்கு வந்த ஈரான் போர்... சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

முடிவுக்கு வந்த ஈரான் போர்... சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்



மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.

G7 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, Versailles அரண்மனையில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் நடைபெற்ற விருந்தின்போது, ​​ட்ரம்ப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

கையெழுத்திடும் முன்னர், விருந்தில் கலந்துகொண்ட தலைவர்களிடம், இந்த ஒப்பந்தமானது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ட்ரம்ப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இதை அருகில் இருந்து பார்வையிட்டுள்ளார்.

எஞ்சிய தலைவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கும், 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முயற்சிப்பதற்கும்,

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் கடமைப்படுத்தும் வகையில், 14 அம்சங்களைக் கொண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் அமைந்துள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குதல், ஹார்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல வழிவகை செய்தல், கட்டம் கட்டமாகத் தடைகளைத் தளர்த்துதல்,

முடக்கப்பட்ட ஈரானியச் சொத்துகளை விடுவித்தல் மற்றும் குறைந்தது 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான, அமெரிக்க ஆதரவுடனான ஈரான் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் ஆகியவையும் இதில் அடங்கும்.

மேலும், அணு ஆயுதங்களை உருவாக்கவோ அல்லது பெறவோ மாட்டோம் என்பதை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையின் கீழ் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு தொடர்பான எதிர்கால விவாதங்களை அது முன்னறிவிப்பதாகவும் அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.



இந்த நிலையில், அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை உறுதிப்படுத்திய ஈரான் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அந்த ஒப்பந்தம் எந்த அளவுக்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பதை சோதித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது என்று கூறினார்.

சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது ட்ரம்புடன் இருந்த பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்த ஒப்பந்தம் சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவு என்று குறிப்பிட்டார்.



அமெரிக்க-ஈரான் போரில் சிறிது காலம் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான், இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை வரவேற்றுள்ளது.

No comments: