யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு முன்னாள் அரசாங்க அதிபரும், மத்திய அரசின் சுற்றாடல் அமைச்சின் முன்னாள் செயலாளரும் அரசாங்கத்தின் பல ஆணைக்குழுக்களில் உயர் பதவிகள் வகித்தவருமான கலாநிதி தேவநேசன் நேசையா காலமானார்.
அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
மிக மூத்த வயதில் இவர் காலமாகியதால் இவரைத் தெரியாத தலைமுறையொன்று உருவாகி விட்டது.
இவருடைய தந்தையார் நேசையா இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை S J V செல்வநாயகத்துடன் இணைந்து 1949 ஆம் ஆண்டில் உருவாக்கினார்.
பெரியார் நேசையா சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையிலுள்ள தனது வீட்டில் வெள்ளை வேட்டி, வெள்ளை நசனல் ஆடையுடன் உலா வந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.தாய் மண்ணில் தாயக விடுதலையில் அவர் கொண்டிருந்த பற்றுப் பாசம் உயர்வானது.
அமரர் தேவநேசன் 1993 ஆம் ஆண்டான விடுதலைப் புலிகள் ஆளுகைக் காலத்தில் யாழ்ப்பாணம் வந்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கைலாசபதி அரங்கில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாகவும் பல விடயங்களைக் கூறினார்.
உண்மையான நேர்மையான நிர்வாகியாக தாய் மண்ணுக்குச் சேவைகள் செய்த தேவநேசன் நேசையா போற்றுதலுக்குரியவர்.

No comments: