News Just In

6/16/2026 06:30:00 AM

அமெரிக்காவின் B-52 குண்டுவீச்சு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து

அமெரிக்காவின் B-52 குண்டுவீச்சு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து



அமெரிக்க விமானப்படையின் B-52 Stratofortress குண்டுவீச்சு போர் விமானம், கலிஃபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

எட்வர்ட்ஸ் விமானத் தளம் வெளியிட்ட தகவலின்படி, அவசர உதவி குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றுள்ளன. விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Fox News வெளியிட்ட காட்சிகளில், விமானத் தளத்தின் ரன்வேயில் தீப்பற்றி எரிந்த பகுதியை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன

B-52 Stratofortress என்பது அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லக்கூடிய, 70,000 பவுண்டுகள் வரை பாரம் சுமக்கும் திறன் கொண்ட, 110 மில்லியன் டொலர் மதிப்புள்ள விமானமாகும்.

இது வியட்நாம், வளைகுடா போர், ஈராக், ஆப்கானிஸ்தான் போரில் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஈரானுடன் நடைபெறும் போரிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எட்வர்ட்ஸ் விமானத் தளம், லாஸ் ஏஞ்சலஸின் வடபகுதியில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய விமானத் தளம் எனக் கருதப்படும் இங்கு, சுமார் 10,000 பேர் பணியாற்றுகின்றனர்.

விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments: