எம்பிலிபிட்டிய - நோனாகம வீதியில், சுதுபாலம பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையின் களஞ்சிய அறை ஒன்றிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவியதால் தீக்காயங்களுக்கு உள்ளான மற்றும் அங்கிருந்து வெளியேறிய நச்சுப் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களே இவ்வாறு எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிபிட்டிய தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments: