News Just In

5/03/2026 06:14:00 AM

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் ‘Career Expo’ சிறப்பாக நடைபெற்று நிறைவு

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் ‘Career Expo’ சிறப்பாக நடைபெற்று நிறைவு



நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று கல்வி வலய அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் தொழில் வழிகாட்டலை மேம்படுத்தும் நோக்கில் ‘Career Expo’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாணவர்கள் தங்களது திறன்கள் மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பான அறிவுகளை அதிதிகளுக்கு விளக்கமாக முன்வைத்தனர். மாணவர்களின் ஆக்கப்பூர்வமான முன்வைப்புகள், நிகழ்வின் ஒழுங்கமைப்பு மற்றும் அதன் வடிவமைப்பு ஆகியவை தொடர்பாக அதிதிகள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு, பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் அஷ்ரக் இஸ்மாயில் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. நிகழ்விற்கு பாடசாலை அதிபர் என்.கே.எம். மிஸ்வர் தலைமை தாங்கினார்.

மேலும், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.பி. பாத்திமா நஸ்மியா அவர்கள் கலந்து கொண்டார். அதோடு, கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். றஸ்மி, வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் ஆலோசகர் ஏ.எம்.எம். ஜெமில், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

மாணவர்களின் எதிர்காலத் திட்டமிடலுக்கு உதவும் வகையில் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் பயனுள்ளதாக அமைவதாகவும், தொடர்ந்து இத்தகைய கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அதிதிகள் கருத்து தெரிவித்தனர்

No comments: