உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
278 பேரின் உயிரர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், அன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் சென்றிருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து ஒருவார காலத்திற்குள் பிணை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் அங்கு தெரிவித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சட்ட மாஅதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று(20) அறிவித்துள்ளார்.
சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்த போதே, இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பல முக்கிய விபரங்களை வெளிப்படுத்தினார்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே நீதிமன்றில் இன்று(20) மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 02 சந்தேகநபர்களும் Zoom ஊடாக நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய 14 பக்க அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் ஒப்பந்தக்காரராக செயற்பட்டுள்ளார் என்பது முறைப்பாட்டாளர்களின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிய அசாத் மௌலானாவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 அதிகாரிகள் பிரான்ஸிற்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
மேற்கோள் ஆரம்பம்
2019/04/21 அன்று இடம்பெற்ற உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா என்பவர் செனல் 4-இற்கு வழங்கிய நேர்காணல் குறித்து கடந்த வாரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் பிரான்ஸிலுள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். அதற்கமைய, மூன்றாவது சந்தேகநபர் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் ஒப்பந்தக்காரராகச் செயற்பட்டுள்ளார் என்பதை முறைப்பாட்டாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேற்கோள் நிறைவு
மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலே, 2017ஆம் ஆண்டு முதல் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினரிடமிருந்து ஏதேனும் ஒரு செயலுக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார் என்பது அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக திலீப பீரிஸ் தெரிவித்தார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
மேற்கோள் ஆரம்பம்
கௌரவ நீதவான் அவர்களே, 2017ஆம் ஆண்டு அலியார் பகுதியில் இரு முஸ்லிம் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலின் போது, சஹ்ரானின் குழுவை சேர்ந்த செயினி மௌலவி என்பவர் விளக்கமறியலில் வைக்கப்படுகிறார். அந்த சந்தர்ப்பத்தில் பிள்ளையானிடம் இந்த செயினி மௌலவி, 'எங்களிடம் 8 பேர் இருக்கிறார்கள், தேவையான எந்த நேரத்திலும் உயிரிழக்க தயாராக இருக்கிறார்கள்' என கூறியுள்ளார். மூன்றாவது சந்தேகநபருக்கு இந்த விடயம் தெரியவருகிறது. இவர்களிடமிருந்து எம்மால் ஒரு வேலையைச் செய்துகொள்ள முடியும் என அவர் நினைத்துள்ளார். 2017ஆம் ஆண்டு முதல் இந்த குழுவினரிடமிருந்து ஒரு வேலையை வாங்குவதற்காக அவர் காத்திருந்தார். நீதவான் அவர்களே, இந்த குழுவிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குண்டுகளை வெடிக்கச் செய்த சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 6 பேர் இருந்தனர்
மேற்கோள் நிறைவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை சந்தித்தமை தொடர்பாகவும் இதன்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
மேற்கோள் ஆரம்பம்
கௌரவ நீதவான் அவர்களே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிள்ளையானை சந்திப்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ சென்றுள்ளனர். அங்கு சென்று பிள்ளையானை சந்தித்த அவர்கள், கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகி ஒருவார காலத்திற்குள் அவரை வெளியே எடுப்பதாகக் கூறியுள்ளனர். இந்த மூன்றாவது சந்தேகநபரை புலனாய்வுப் பிரிவு பிரதானியாக்கி இலங்கைக்கு வரவழைப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் நீதவான் அவர்களே, 2017 அலியார் பகுதி சம்பவத்துடன் தொடர்புடையதாக விளக்கமறியலில் இருந்த சஹ்ரானின் ஆட்களில் ஒருவரான செயினி மௌலவிக்கு பிணை பெற்றுக்கொள்வதற்காக சட்டத்தரணி கட்டணங்களை வழங்குவதற்கு இந்த மூன்றாவது சந்தேகநபர் தலையிட்டு இராணுவப் புலனாய்வு பிரிவிலிருந்து 250,000 ரூபா பணத்தை வழங்கியுள்ளார். அதற்கு மேலதிகமாக பிள்ளையான் தலையிட்டு அவரது குடும்பத்தினரின் செலவுகளுக்காக என தனியாக 50,000 ரூபா வழங்கியுள்ளார். இவர் ஒரு அரச அதிகாரி. இந்த மூன்றாவது சந்தேகநபர், 2019ஆம் ஆண்டின் ஏதோ ஒரு தீர்மானமிக்க நாள் வரும் வரை இவர்களை பராமரித்து பாதுகாத்து வந்துள்ளார். கௌரவ நீதவான் அவர்களே, அரசியல் நோக்கத்திற்காகவே இது செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆரம்பத்தில் வடக்கில் உள்ள இராணுவக் குழுவொன்றை இலக்கு வைத்தோ அல்லது தெற்கு பகுதியிலோ இந்த தாக்குதலை நடத்தவே திட்டமிட்டிருந்தனர். பின்னரே, கத்தோலிக்க பக்தர்களின் முக்கிய நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இத்தாக்குதலை நடத்த தீர்மானித்துள்ளனர். இவர் ஒரு அரச அதிகாரி. இந்த விடயங்களை இவர் யாருடைய ஒப்பந்தத்திற்காக செய்தார் என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
மேற்கோள் நிறைவு
பிள்ளையான் உள்ளிட்ட குழுவினரையும் சஹ்ரான் உள்ளிட்ட அவரது குழுவையும் பராமரிப்பதற்கு இராணுவப் புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
மேற்கோள் ஆரம்பம்
கௌரவ நீதவான் அவர்களே, இந்த மூன்றாவது சந்தேகநபர் 2006ஆம் ஆண்டின் பின்னர் பிள்ளையானுடன் எந்த தொடர்பையும் பேணவில்லை என கூறுகிறார். ஆனால், தாக்குதலின் பின்னர் அஹுங்கலவிலுள்ள ஹோட்டலொன்றில் இவர் பிள்ளையான், அவரது குடும்பத்தினர் மற்றும் அசாத் மௌலானாவிற்கு விருந்து வழங்கியுள்ளார். அது அந்த ஹோட்டலின் லொக் புக்கிலும் பதிவாகியுள்ளது. கௌரவ நீதவான் அவர்களே, பிள்ளையான் உள்ளிட்ட குழுவினரையும் சஹ்ரான் உள்ளிட்ட அவரது குழுவையும் பராமரிப்பதற்கு இராணுவப் புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த பணம் அரசாங்கத்தின் பணம், எமது பணம் தான் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீதவான் அவர்களே, பிள்ளையான் உள்ளிட்ட குழுவினரும் அன்றைய இராணுவப் புலனாய்வு பிரிவும் இணைந்து ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, ஊடகவியலாளர் உபாலி தென்னகோன், ஊடகவியலாளர் கீத் நோயர், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரவீந்திரநாத், சிவராம் உள்ளிட்ட பெருமளவிலானோரை கடத்திய சம்பவங்கள் மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றங்களை செய்துள்ளனர்
மேற்கோள் நிறைவு
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் உள்ள மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலேயை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
மேற்கோள் ஆரம்பம்
கௌரவ நீதவான் அவர்களே, இந்த மூன்றாவது சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் உள்ளார். இந்த நாட்களில் இரகசியமான முறையில் நபர்கள் இறக்கிறார்கள், கொல்லப்படுகிறார்கள். இந்த சந்தேகநபரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி முன்நகர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இந்த சந்தேகநபரை தாண்டி இந்த விசாரணை முன்னோக்கிச் செல்வதை தடுப்பதற்காக வெளியில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று காத்துக்கொண்டிருக்கிறது. அத்துடன் நீதவான் அவர்களே, சந்தேகநபர் சட்ட உதவியைப் பெறும்போது அதனை ஏதேனும் ஒரு மேற்பார்வையின் கீழ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நீதவான் அவர்களே, இந்த சந்தேகநபர் தண்டனை சட்டக்கோவையின் 127ஆவது பிரிவின் பிரகாரம் தங்கள் முன்னிலையில் வாக்குமூலம் வழங்கக் கோரியுள்ளார். சந்தேகநபருக்கு இப்போது இந்த விசாரணை செல்லும் திசை புரிகிறது. எனவே கௌரவ நீதவான் அவர்களே, தங்களின் மனதை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்க முற்படலாம்
மேற்கோள் நிறைவு
சுரேஷ் சலே சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, பிரான்ஸில் வசிக்கும் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் ஒரு சாட்சியம் அல்ல என தெரிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ
மேற்கோள் ஆரம்பம்
கனம் நீதவான் அவர்களே, பிரான்ஸில் இருக்கும் அசாத் மௌலானா என்பவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் குறித்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். ஒரு நபரிடமிருந்து பெறப்படும் வாக்குமூலம் சாட்சியமாக அமையாது. அது ஒரு வழக்கு விசாரணையின் போது சாட்சியங்கள் ஆராயப்பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்ட பின்னரே உறுதிப்படுத்தப்படும். அசாத் மௌலானா இலங்கைக்கு வராமல் இருப்பதற்கு காரணம், அவர் பலதார திருமணம் புரிந்தது தொடர்பாக அவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் அந்த வாக்குமூலத்தை வழங்கிய செனல் ஃபோ அலைவரிசை எவ்வித நம்பகத்தன்மையும் இல்லாத ஊடக நிறுவனமாகும். எனது சேவைபெறுநர் தண்டனை சட்டக்கோவையின் 127ஆவது பிரிவின் கீழ் உங்கள் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க விரும்புகிறார். அதனை இன்றைய தினமே பதிவு செய்ய ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், அவர் உங்கள் முன்னிலையில் ஒரு நீண்ட வாக்குமூலத்தை வழங்கவுள்ளார். ஒரே நாளில் அந்த வாக்குமூலத்தை வழங்கி நிறைவுசெய்ய முடியாது போகலாம்
மேற்கோள் நிறைவு
இதேவேளை, விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி வழங்கப்படும் பட்சத்தில், அசாத் மௌலானா இலங்கைக்கு வருவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
பிள்ளையானின் அறிவுறுத்தலின் பேரில், சுரேஷ் சலே உள்ளிட்ட இராணுவ புலனாய்வு பிரிவினருக்கும் சஹ்ரானின் குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற அனைத்து கலந்துரையாடல்களின் போதும் தான் குறிப்புகளை எடுத்திருந்ததாகவும் அத்தகைய குறிப்புகள் அடங்கிய 05 புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான சுரேஷ் சலேவை வழக்கு விசாரணையன்று பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டுமா, இல்லையா என்பது குறித்த உத்தரவு அடுத்த வழக்கு தவணையின் போது அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன், நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுமா, இல்லையா என்பது குறித்த உத்தரவும் அன்றைய தினமே வழங்கப்படும் என நீதவான் குறிப்பிட்டார்.
இதற்கமைய வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments: