News Just In

5/25/2026 11:56:00 AM

மருத்துவமனையில் செங்கோட்டையன் திடீர் அனுமதி

மருத்துவமனையில் செங்கோட்டையன் திடீர் அனுமதி




தமிழக வரு​வாய்த் துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கோவை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் 22-ம் தேதி இரவு சென்​னை​யில் இருந்து விமானத்​தில் கோவை வந்​தார். பின்​னர் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். இதனிடையே நேற்று முன்​தினம் இரவு வீட்​டில் இருந்​த​போது அவரது உடல்​நிலை திடீரென பாதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, அவர் சிகிச்​சைக்​காக கோவை-அவி​நாசி சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு​கிறது. செங்​கோட்​டையன் காய்ச்​சல் காரண​மாக சிகிச்சை பெற்று வரு​வ​தாக​வும், உடல்​நலம் சீராக இருப்​ப​தால் இன்று (மே 25) காலை வீடு திரும்​பு​வார் என்​றும் மருத்​து​வ​மனை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

No comments: