News Just In

5/29/2026 07:56:00 AM

புங்குடுதீவை உலுக்கிய சோகம் - வள்ளத்திலிருந்து தவறி விழுந்த அதிபர் உயிரிழப்பு!

புங்குடுதீவை உலுக்கிய சோகம் - வள்ளத்திலிருந்து தவறி விழுந்த அதிபர் உயிரிழப்பு!



வள்ளத்திலிருந்து தவறி விழுந்து அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நயினாதீவு - குறிகட்டுவான் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

நயினாதீவை பூர்வீகமாகக் கொண்ட அதிபரான நடராசா மயூரன் என்பவரே மேற்படி பரிதாபமாக உயிரிழந்தவராவார்

இவர் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை முன்னாள் அதிபரும், நயினாதீவு கணேச மகா வித்தியாலய தற்போதைய அதிபருமாவார்.

நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி வள்ளத்தில் பயணித்த குறித்த அதிபரே, தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் புங்குடுதீவில் மேற்கொள்ளப்படும் கல்வித் திட்டங்களுக்கு குறித்த அதிபர் பேருதவியாக செயற்பட்டார்.

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் நிறைவேற்றப்பட்ட சகல திட்டங்களும் குறித்த அதிபரின் வேண்டுகோளிலேயே செயற்படுத்தப்பட்டது.

குறித்த அதிபரின் இழப்பு புங்குடுதீவு மண்ணுக்குப் பேரிழப்பாகும்.

No comments: