ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் கொலையா தற்கொலையா என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்தவிடயம் தொடர்பில் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 10ற்கும் மேற்பட்டோர் இந்தவழக்கில் சாட்சி கூறியுள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா வீட்டிலுள்ள சிசிரிவி காட்சிகள் பதிவாகாது என தெரிவித்த நிலையில் கபில சந்திரசேன வீட்டிலுள்ள சிசிரிவி காட்சிகளும் பதிவாகாது என்று தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் மேலும் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன, அதாவது கபிலவை பிணையில் எடுக்க அரவிந்த டி செல்வாவினால் ஏற்பாடு செய்யபட்டவர்கள் முதல் நாள் வீட்டில் இருந்துள்ளனர்.
ஆனால் அவர்களிடம் இதுவரையில் வாக்குமூலம் பெறப்படவில்லை. விசாரணைகளின் அடிப்படையில் 1 மணிக்கு வீட்டு பணியாளர் தான் கபிலவை பார்த்திருக்கின்றார்.
பிணையில் எடுக்க அரவிந்த டி செல்வாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கைந்து பேர் வந்ததாக அனுஸ்கா டி செல்வா தெரிவித்திருந்திருந்த நிலையில், அதில் ஒருவர் அரவிந்த டி செல்வா மற்றும் கபிலவுடன் இரவு உணவு மேசையில் இருந்ததாகவும் மற்றவர்கள் சென்று விட்டதாகவும் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments: