News Just In

5/13/2026 12:37:00 PM

வடக்கு கிழக்கில் சுமார் 3 சதவீதமான தொழில்சாலைகளே உள்ளன. அதனால் தொழிலற்றோர் எண்ணிக்கை அதிகரித்து நுண்நிதிக் கடன்களில் சிக்க வேண்டியேற்படுகிறது.!சிறிநேசன் எம்பி

வடக்கு கிழக்கில் சுமார் 3 சதவீதமான தொழில்சாலைகளே உள்ளன. அதனால் தொழிலற்றோர் எண்ணிக்கை அதிகரித்து நுண்நிதிக் கடன்களில் சிக்க வேண்டியேற்படுகிறது.!சிறிநேசன் எம்பி


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

சமூகத்தில் நிலவும் போதைப்பொருள், ஊழல், மோசடி, சமூகச் சீரழிவுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தொழிலற்ற நிலைமையும் வருமானமின்மையுமே முதன்மைக் காரணங்களாக உள்ளன.

வடக்கு கிழக்கில் சுமார் 3 சதவீதமான தொழில்சாலைகளே உள்ளன. அதனால் தொழிலற்றோர் எண்ணிக்கை அதிகரித்து சமூகம் நுண்நிதிக் கடன்களில் சிக்க வேண்டியேற்படுகிறது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

சமூகப், பொருளாதார, அரசியற், பண்பாட்டு, நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகும் வகையிலமைந்த மக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் இந்துமதி ஹரிஹரதாமோதரன் தலைமையில் சட்டத்தரணி குகதாஸன் ஐங்கரனின் நெறிப்படுத்தலில் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி சிறிநாத், எம்.எஸ். உதுமாலெப்பை உட்பட மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அடையாளப்படுத்தப்பட்ட சமகால சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுப் பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள், வீட்டுத் திட்டம் தொடர்பான சவால்கள், நுண்நிதிக் கடன்களால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சட்ட ஏற்பாடுகளிலுள்ள பாதுகாப்பின்மை, பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தீர்ப்பதற்கான சட்ட வழிமுறைகள், மாதவிடாய் சார் பாரபட்ச நிலைமைகளும், அரச கொள்கைகளின் அமுலாக்கமின்மையும், பயங்கரவாதத் தடைச்சட்டம், மொழியுரிமை மீறப்படல் போதைப் பொருள் பாவனை ஏற்படுத்தும் பிரச்சினைகள் உள்ளிட்டவை பாராளுமன்ற பிரதிநிதிகளிடம் முன்வைக்கப்பட்டன.

சிவில் சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட பின் நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சிறிநேசன் எம்பி,

சட்டங்கள் சரியானதாக இருந்தாலும் அதை அமுல்படுத்தும் போது தான் பிழைகள் ஏற்படுகின்றன. வீட்டுக்குரிய பயனாளிகளைத் தெரிவு செய்யும் பொறிமுறையில் பிழைகள் பக்கச் சார்புகள் இருக்கின்றன.

அந்தக் காலத்தில் இருந்த விவசாயக் கட்டமைப்பு முறைமை கிராமத்தில் பஞ்சம், பசி, பட்டினி நீக்க உதவியது. ஆனால் இப்பொழுது இயந்திரமயமாக்கல் கிராம மக்களின் வாழ்க்கை முறையை அழித்து அவர்களை பட்டினிக்குக் கொண்டு போய் விட்டது. இயந்திரமயமாக்கல் ஏழைகளின் வாழ்வில் விழுந்த பலத்த அடி என்றுதான் சொல்ல வேண்டும்.

வடக்கு கிழக்குக்க வெளியே 96.7 சதவீத தொழில் சாலைகள் இயங்குகின்றன. அதனால் அங்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகம். ஆனால், வெறும் 3.03 வீதமான தொழில் சாலைகள்தான் வடக்கு கிழக்கில் உள்ளன. இதனால் இங்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லை. இங்கிருந்த அத்தனை தொழில்சாலைகளையும் யுத்தம் அழித்து விட்டது. தொழில்வாய்ப்புக்கள் இல்லாத நிலையில்தான் நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் நுழைந்தன.

போதைப் பொருள் சம்பந்தமான வழக்குகளை பொலிஸார் அதிகளில் பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். போதைப் பொருள் சம்பந்தமான வழக்குகள் கூடிக்கொண்டே போகின்றன வென்றால் போதைப் பொருள் ஒழிப்பு அல்லது தடுப்புக்கான பொலிஸாரின் செய்றபாடுகள் மந்த கதியில் உள்ளன என்றுதான் அர்த்தம்.

போதைப் பொருள் உற்பத்தியை, விநியோகத்தை, பாவனையை சட்டத்தால் மட்டும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அதற்கெதிராக ஒட்டு மொத்த சமூகமும் இணைந்து செயற்பட வேண்டும். அப்பொழுதுதான் விடிவு காலம் பிறக்கும்.

இயன்றவரைக்கும் முதலீட்டாளர்களை கவர்ந்து தொழில் சாலைகளை ஏற்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். தொழில்வாய்ப்புக்கள் இருந்தால் சமூகத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகள் தீரும். ஊழல், கசிப்பு, போதைப் பொருள், நுண்கடன் எல்லாம் தீரும்.

கிராமத்தில் உள்ள இளைஞர்கள், யுவதிகள் சமூக நலன் விரும்பிகள் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் சமூகத்தில் நிலவும் அநேக பிரச்சிகைனகனைத் தீர்க்கலாம். விழிப்புக் குழுக்களாகச் செயற்பட வேண்டும். கசிப்பு வடிசாரத்தை முற்றாக ஒழித்த கிராமங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுதாரணமாய் உள்ளன. அதேவேளை முன்னுதாரணமான பொலிஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

இந்த அரசாங்கம் ஊழலுக்கு எதிராக செயற்பாட்டில் உள்ளது. அதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஏனென்றால் நான் நூறு வீதம் ஊழலுக்கெதிரான ஒருவன். அரசு முன்னெடுக்கும் நல்ல, மக்கள் நலன் சார்ந்த விசயங்களுக்கு நாங்கள் எங்களின் அமோக ஆதரவை அரசுக்குத் தருவோம்.” என்றார்

No comments: