News Just In

5/20/2026 01:14:00 PM

125 ரூபாவால் அதிகரிக்கும் கிலோ பால் மாவின் விலை

125 ரூபாவால் அதிகரிக்கும் கிலோ பால் மாவின் விலை



அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் தொடர்ந்து கடுமையாக பலவீனமடைந்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

குறித்த விடயத்தை இன்று (20) பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும் போது, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் சீனி விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் மூலம் தெரிய வருகின்றது.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் அமெரிக்க டொலரின் பெறுமதி காரணமாகவே சீனியின் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு நாட்டில் அடுத்த மூன்று மாதங்களுக்குப் போதுமான சீனி கையிருப்பில் உள்ளதாகவும், சீனித் தட்டுப்பாடு காரணமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதையும் அவர்கள் மறுத்துள்ளனர்.

No comments: