தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும், ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவாகவும் பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவாக 85.15% வாக்குகள் பதிவாகிப் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில், புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் (TVK) மற்றும் நாம் தமிழர் கட்சியின் தனித்துப் போட்டி ஆகியவை இந்தத் தேர்தலை நான்கு முனைப் போட்டியாக மாற்றியுள்ளன.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களம் மட்டுமல்ல;இது ஒவ்வொரு அரசியல் கட்சியின் இருப்பு மற்றும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் ஒரு 'வாழ்வா - சாவா' போராட்டமாக உருவெடுத்துள்ளது.
திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், தோல்வி என்பது அந்தந்தக் கட்சிகளுக்குப் பேரிடியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுக
ஆளுங்கட்சியான திமுகவிற்கு இந்தத் தேர்தல் ஒரு மிகப்பெரிய அக்னிப்பரீட்சையா மாறியுள்ளது.
கடந்த ஐந்து கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது. ஒருவேளை திமுக ஆட்சியைத் தக்கவைக்கத் தவறினால், அது கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளை முடக்கிவிடும்.
குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கட்சியின் உச்சபட்ச தலைமைப் பொறுப்பிற்கு கொண்டு வரும் முயற்சிகளுக்கு இது முற்றுப்புள்ளி வைத்துவிடும் என கூறப்படுகின்றது.
வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், வெற்றியைத் தராத பட்சத்தில் உதயநிதியின் எதிர்கால தலைமைத்துவத்தை கட்சிக்குள்ளேயே கேள்வி எழுப்பும் சூழல் உருவாகலாம்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
கடந்த 11 தேர்தல்களில் (உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் உட்பட) தொடர் சறுக்கல்களைச் சந்தித்து வரும் அதிமுகவிற்கு, இது 'இறுதிப் போர்' போன்றது என கூறப்படுகின்றது. எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்குக் கீழ் கட்சி சந்திக்கப்போகும் மிக முக்கியமான தேர்தல் இது.
இதில் தோல்வியடைந்தால், ஈபிஎஸ் தனது பொதுச்செயலாளர் பதவியைத் தக்கவைப்பது கடினமாகிவிடும்.

மேலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரின் அழுத்தம் இப்போது இல்லை என்றாலும் மற்ற தலைவர்களின் அழுத்தம் அதிகரித்து, கட்சி பல துண்டுகளாகச் சிதறும் அபாயம் உள்ளது. இந்தத் தோல்வி அதிமுகவை தமிழக அரசியலில் ஒரு பலவீனமான கட்சியாக மாற்றக்கூடும்.

தமிழக வெற்றிக்கழகம்
நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியுள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) இந்தத் தேர்தலில் தான் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறது. ஆரம்பத்திலேயே ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினால், கட்சி வளர்வதற்கு முன்பே முடங்கிவிடும்.
விஜய்யின் ரசிகர் பட்டாளம் வாக்குகளாக மாறவில்லை என்றால், திரையுலகில் இருந்து வந்த மற்ற நடிகர்களின் கட்சிகளைப் போலவே இதுவும் ஒரு 'சினிமா கட்சி' என்ற முத்திரையோடு காணாமல் போக வாய்ப்புள்ளது.

விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு இந்த முதல் தேர்தல் 'எண்ட் கார்டு' போடும் காரணியாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அவர் தீவிரமாக உள்ளார்.
மேலும் நடிகர் விஜய் தனது திரையுலக பயணத்திலிருந்து விடுப்பட்டு அரசியலில் களமிறங்கியுள்ளார்.
எனவே அவரின் எதிர்காலம் இதிலேயே தங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை மெல்ல மெல்ல உயர்த்தி வரும் சீமானின் 'நாம் தமிழர் கட்சி', இந்த முறையும் தோல்வியைத் தழுவினால் அது தொண்டர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தும்.
"மாற்று அரசியல்" என்று பேசி வரும் சீமான், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றால், அக்கட்சி வெறும் 'பேச்சுத் திறமை கொண்ட கட்சி' என்ற விமர்சனத்திற்கு உள்ளாகும்.

தொடர் தோல்விகள் அக்கட்சியை அரசியல் அரங்கில் இருந்து ஓரங்கட்டக்கூடும். தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த 2026 தேர்தல், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வாழ்வாதாரப் போராட்டமாக மாறியுள்ளது.
இதில் வெற்றி பெறுபவர்கள் வரலாற்றில் நிலைப்பார்கள்; தோற்பவர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைக்கவே போராட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: