நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், பிரதேச சபை உறுப்பினர் சின்னத்தம்பி சிவகுமார் அவர்களின் நேரடி கண்காணிப்பில் வீதி மின்விளக்குகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதேச மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த வீதி மின்விளக்குகள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவாக நிறைவேற்றும் நோக்கில், பிரதேச சபையின் மின்னிணைப்பு ஊழியர்கள் இணைந்து பல்வேறு பகுதிகளில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், செயலிழந்த மின்விளக்குகள் பழுது பார்க்கப்பட்டதுடன், தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இரவு நேரங்களில் மக்களின் பாதுகாப்பு மேம்படும் என்பதுடன், போக்குவரத்து சீராக நடைபெறவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த பணிகள் கட்டுக்கோப்பாக அனைத்து வார்டுகளிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என பொறுப்புக்கூறிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதேச மக்களும் இந்த நடவடிக்கையை வரவேற்று, தங்களது பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் வகையில் செயல்படும் பிரதேச சபைக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
No comments: