News Just In

4/26/2026 10:07:00 AM

அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் விருத்தில் துப்பாக்கிச் சூடு ; ட்ரம்ப் பாதுகாப்பாக வெளியேற்றம்

அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் விருத்தில் துப்பாக்கிச் சூடு ; ட்ரம்ப் பாதுகாப்பாக வெளியேற்றம்



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை உயர்மட்ட ஊடகவியலாளர்களுக்கான விருந்து நிகழ்வின் போது, ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து ட்ரம்ப் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற வருடாந்த வெள்ளை மாளிகை ஊடகவியலாளர்கள் சங்க விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, மண்டபத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் ட்ரம்பையும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களையும் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரகசிய சேவை அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத அங்கி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

ஆயுதங்களுடன் பாதுகாப்புச் சாவடியைக் கடந்து உள்ளே நுழைய முயன்ற ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

சம்பவத்திற்குப் பின்னர் நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப்,

"ஆயுதமேந்திய ஒரு நபர் அமெரிக்க அரசியலமைப்பைத் தாக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் நமது குடியரசைச் சீர்குலைக்க ஒரு கொலையாளி முயல்வது இது முதல் முறையல்ல. அமெரிக்கர்கள் அனைவரும் நமது கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்க்க உறுதியேற்க வேண்டும்." எகத் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் வெடிமருந்து வாசனையை உணர்ந்தோம். சத்தம் கேட்டவுடன் அனைவரும் மேசைகளுக்கு அடியில் பதுங்கினோம். அது ஒரு பயங்கரமான சூழல்.சுமார் 5 முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. என சம்பவ இடத்திலிருந்த அல் ஜசீரா ஊடுகவியலாளர் கிறிஸ் ஷெரிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்படும் எத்தனையோ படுகொலை முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கு முன்னதாக 2024-ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அவரது வலது காதில் காயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: