News Just In

4/08/2026 05:29:00 AM

நெல்லையில் விஜய் இன்று தேர்தல் பிரச்சாரம்: 51 நிபந்தனைகளுடன் வீதி கண்காட்சி நடத்த அனுமதி

நெல்லையில் விஜய் இன்று தேர்தல் பிரச்சாரம்: 51 நிபந்தனைகளுடன் வீதி  கண்காட்சி   நடத்த அனுமதி



திருநெல்​வேலி​யில் தவெக தலை​வர் விஜய் இன்று பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். ரோடு ஷோ நடத்த 51 நிபந்​தனை​களு​டன் காவல்​துறை அனு​மதி அளித்​துள்​ளது.

திருநெல்​வேலி, தென்​காசி, தூத்​துக்​குடி, கன்​னி​யாகுமரி ஆகிய 4 மாவட்​டங்​களில் உள்ள 22 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் போட்​டி​யிடும் தவெக வேட்​பாளர்​களை ஆதரித்​து, அக்​கட்சி தலைவர் விஜய் இன்று திருநெல்​வேலி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

இதற்காக தூத்​துக்குடி விமான நிலை​யத்துக்கு தனி விமானத்​தில் இன்று காலை வரும் விஜய், அங்​கிருந்து பாளை​யங்​கோட்​டைக்கு சாலை மார்க்​க​மாக வரு​கிறார். கேடிசி நகரில்​ பகல் 12 மணிக்கு நடை​பெறும்பொதுக்​கூட்​டத்தில் பங்கேற்​கிறார். அங்​கிருந்து புறவழிச்​சாலை வழி​யாக தாழையூத்​துக்கு செல்​கிறார்.

பின்​னர், தச்​சநல்​லூர், வண்​ணார்​பேட்​டை, முரு​கன்​குறிச்​சி,சமா​தானபுரம் வரை திறந்த வேனில் இருந்​த​படி ரோடு ஷோ நடத்​துகிறார். பின்​னர், தூத்​துக்​குடி சென்று, அங்கும் ரோடு ஷோ நடத்​துகிறார். பின்​னர், தனி விமானத்​தில் சென்னை செல்​கிறார். பிரச்​சார பொதுக்​கூட்​டம் நடை​பெறும் இடத்தை பார்​வை​யிட்ட தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: காவல் துறை​யினர் வழங்​கி​ய வழி​காட்​டு​தல்கள் மற்​றும் நிபந்​தனை​களின் அடிப்​படை​யில் அனைத்து பாதுகாப்பு ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

நெல்லை பிரச்​சாரத்​தைத் தொடர்ந்து தூத்துக்குடிக்​கும் செல்​கிறார் பிரச்​சாரம் ரத்​தாகிறது என்ற வதந்​தி​களுக்கு இடமில்​லை. திட்​ட​மிட்​டபடி பிரச்​சா​ரம் நடக்​கும். இது ஒருமுக்​கிய​மான மக்​கள் சந்​திப்பு நிகழ்​வு. இவ்​வாறு தெரி​வித்தார்.

இதனிடையே பொதுக்​கூட்​டம் நடை​பெறும் பகு​தியை திருநெல்​வேலி மாநகர காவல் ஆணை​யர் தேஷ்​முக் உள்​ளிட்ட உயர் காவல்​துறை அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். கூட்​டத்​தில் பங்​கேற்​பவர்களுக்கு குடிநீர், கழிப்​பிட வசதி,ஆம்​புலன்ஸ் மற்​றும் தீயணைப்பு வாக​னங்​கள் வந்து செல்ல வசதி, ரோடு ஷோ நடத்​தும்​போது குறிப்​பிட்ட எண்​ணிக்​கை​யில் மட்​டுமே வாக​னங்​கள் பின்​தொடர வேண்​டும், விஜய்​யின் வாக​னத்தை மோட்​டார் சைக்​கிள்​களில் பின்​தொடரக்​கூ​டாது உள்​ளிட்ட 51 நிபந்​தனை​கள் விதித்து காவல்​துறை அனு​மதி அளித்​துள்​ளது.

No comments: