News Just In

3/28/2026 11:26:00 AM

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த வேகப்பந்து வீச்சாளர் அழகராஜ் லதுர்சன்அவர்களை வீடு சென்று வாழ்த்திய சாணக்கியன் MP

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த வேகப்பந்து வீச்சாளர் அழகராஜ் லதுர்சன்அவர்களை வீடு சென்று வாழ்த்திய  சாணக்கியன் MP 


மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த வேகப்பந்து வீச்சாளர் அழகராஜ் லதுர்சன்அவர்களை வீடு சென்று வாழ்த்தி கௌரவித்தபோது.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் Lasith Malinga அவர்கள் முன்னெடுத்த
இந்த தேசிய அளவிலான வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வில், எமது மண்ணை
சேர்ந்த இளம் வீரர் அழகராஜ் லதுர்சன் தெரிவு செய்யப்பட்டிருப்பது மிகவும்
பெருமைக்குரிய விஷயம்.

3500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டித் தேர்வில், முதல்
கட்டத்திலேயே தன்னை நிரூபித்திருப்பது அவரது திறமைக்கும் உழைப்பிற்கும்ஒரு சான்றாகும்.

மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் அவரது திறன்,
எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பை காட்டுகிறது.
மட்டக்களப்பிலும் உலகத் தரத்தில் விளையாடக்கூடிய திறமைகள் உள்ளன என்பதைஇது மீண்டும் நிரூபிக்கிறது.

நான் அவரை நேரில் வீடு தேடி சென்று சந்தித்து வாழ்த்தியபோது, அவரது
எளிமையும் உறுதியும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் தொடர்ந்து கடினமாகபயிற்சி செய்து, தனது கனவுகளை நனவாக்குவார் என்று நம்புகிறேன்.

இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். அழகராஜ்லதுர்சனுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவர் இலங்கைக்கும்,மட்டக்களப்ப்பு மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டுகிறேன்

No comments: