News Just In

3/31/2026 07:55:00 PM

பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கல் மற்றும் பெருநாள் ஒன்றுகூடல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது

பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கல் மற்றும் பெருநாள் ஒன்றுகூடல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது


நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்புப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வும், பெருநாள் ஒன்றுகூடல் கொண்டாட்டமும் இன்று (31) மாலை பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சமூக ஆர்வலர் ஏ.ஆர்.எம். ஹசீம் மற்றும் உபைத் லேர்னஸ் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். றிப்னாஸ் ஆகியோரின் ஒத்துழைப்பில் இந்த ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டன. இச்சாதனங்கள் பாடசாலையின் அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் கல்விசார் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், கல்வி வளர்ச்சியில் சமூக பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இத்தகைய உதவிகள் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் துணையாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், ஏ.எம். ஹஸீன், எம்.எச். ரியாஷா, என். வரணியா, அஸ்மா அப்துல் மலீக், கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.என்.ஏ. மலிக், ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் எம்.ஐ.எம். ரியாஸ், உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். ஆரீப், கிழக்கு மாகாண தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் நூருல் ஹுதா உமர், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ. அப்துல் ஜப்பார், ஆசிரிய ஆலோசகரும், பாடசாலைக்கான வலயக்கல்வி அலுவலக இணைப்பாளருமான எஸ்.எம்.எம். அன்சார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அத்துடன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அசாம் அப்துல் அசீஸ், முஹம்மட் இர்சாத், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வில் உற்சாகத்தை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வுடன் இணைந்து பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி சமூக ஒற்றுமை, பகிர்வு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக அமைந்தது. மொத்தத்தில், கல்வி வளர்ச்சியையும் சமூக உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பங்கேற்ற அனைவராலும் பாராட்டப்பட்டதுடன், பாடசாலை சமூகத்திற்கு ஒரு நினைவாகும் சிறப்பான தருணமாகவும் அமைந்தது.

No comments: