நூருல் ஹுதா உமர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவினால் புனித ரமலான் காலத்தை முன்னிட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட “எதிர்காலத் தலைவர்கள் – 7 நாள் இஸ்லாமிய வாழ்க்கை படிப்புகள்” திட்டத்தை நிறைவு செய்த அம்பாறை மாவட்ட வளவாளர்கள் மற்றும் இணைப்பாளர்களுக்கான நன்றியறிதல் நிகழ்வு நேற்றிரவு (29) நடைபெற்றது.
இந்நிகழ்வு, கல்விப் பிரிவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தலைமையில், நிந்தவூர் அலஹாபுரி கடற்கரை பூங்காவில் நடைபெற்றது. நிகழ்வில், அம்பாறை மாவட்ட இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு எதிர்கால தலைவர்கள் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவின் தொடர்ச்சியான செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. மேலும், வளவாளர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளும் பெறப்பட்டன.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், கட்சியின் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், கொள்கைப் பரப்புச் செயலாளர் கே.அப்துல் ரஸாக் ஜவாத், உயர்பீட உறுப்பினர்களான எம்.பி முபீத், எம்.எஸ்.ஜௌபர், ஏ.எல்.எம்.சலீம், நௌபர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ரியாஸ் ஆதம் உள்ளிட்டோர், அம்பாறை மாவட்ட வளவாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் திட்ட இணைப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு, இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் சமூக வழிநடத்தல் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் பயனுள்ளது என குறிப்பிடப்பட்டது

No comments: