News Just In

3/05/2026 03:49:00 PM

சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “சந்திப்பு” நிகழ்வு

சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “சந்திப்பு” நிகழ்வு



நூருல் ஹுதா உமர்

சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை ஏற்பாட்டில் இலக்கிய சந்திப்பு நிகழ்வொன்று நேற்று (04) கலை மற்றும் கலாசார பீட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்களான திரைக்கலைஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் மற்றும் பாலமுனை பாறூக் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமை தாங்கினார். நிகழ்வில் கலை மற்றும் கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.எம். பாஸில் மற்றும் கலாநிதி கே. இரகுபரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

நிகழ்வை ஒருங்கிணைப்பதில் றியாஸ் குரானா மற்றும் எழுகவி ஜெலீல் ஆகியோர் முக்கிய பங்காற்றினர். நன்றியுரையை விரிவுரையாளர் என். சுபராஜ் வழங்கினார்.

மேலும், மொழித்துறைத் தலைவர் ஏ.எப்.எம். அஷ்ரஃப், பேராசிரியை சாதியா பௌஸர் மற்றும் விரிவுரையாளர் எம்.ஐ.எப். சப்னா ஆகியோரின் மேலான ஆலோசனைகள் நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க உதவியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு இலக்கியம், எழுத்து மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு பயனுள்ள கலந்துரையாடலாக அமைந்தது.

No comments: