நான் முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு 2020 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட காலப்பகுதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு அதிகாரசபையுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றேன்.
இன்றைய தினம் 20.03.2026 பாராளுமன்ற கேள்வி–பதில் நேரத்தில், நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சரான கௌரவ அநுர கருணாதிலக அவர்களிடம் நான் கேட்க விரும்புவது இதுவாகும்:
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில், இலங்கையின் மிகவும் பின்தங்கிய பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முணை மேற்கு மற்றும் வவுனதீவு பகுதிகளில், வீடமைப்பு அமைச்சின் மூலம் 50-க்கும் மேற்பட்ட வீட்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் சில வீடுகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான வீடுகள் இன்றளவும் அரைநிலையிலேயே காணப்படுகின்றன.
உண்மையில், கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடமைப்பு அதிகாரசபையின் மூலம் பல முக்கியமான வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் 2020 ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கம் பதவியேற்ற பிறகு, அவை சஜித் பிரேமதாச அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்ற காரணத்தினாலேயே, அந்த வேலைத்திட்டங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
இதன் பின்னர் பதவியேற்ற கோட்டாபய அரசாங்கமும், தொடர்ந்து ரணில் அரசாங்கமும், இத்திட்டங்களை மீளப் புனரமைத்து அப்பகுதி மக்களுக்கு ஒப்படைக்க எந்தத் தீர்மானமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அமைச்சர் அறிவாரா?
மேலும், கடந்த 8 முதல் 10 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு கடன்சுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் அமைச்சர் கவனத்தில் கொண்டுள்ளாரா?
அதன்பின், 2024 ஆம் ஆண்டு உங்கள் அரசாங்கம் பதவியேற்ற பிறகு, “ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இத்திட்டத்தின் கீழ், கிராமங்களில் ஒன்று அல்லது இரண்டு வீடுகள் மட்டுமே கட்டப்படுகின்றன.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கூட 133-க்கும் மேற்பட்ட “Model Village” திட்டங்கள் இதுவரை முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளன. மூவாயிரத்திற்கும் அதிகமான வீடுகள் அடித்தளம், சுவர் அல்லது கூரை மட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இவை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வீடில்லாதவர்களாக அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்டவை.
உங்களது பதிலில், இந்த வீடுகளை பூர்த்தி செய்யத் தேவையான நிதியை அரசுத் தொகையிலிருந்து கோரியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். கௌரவ அமைச்சர் அவர்களே, இத்தகைய பதிலை வழங்க ஒரு அமைச்சர் தேவையா என்ற கேள்வி எழுகிறது.
நீங்கள் வீடமைப்பு அதிகாரசபைக்குப் பொறுப்பான அமைச்சர். ஆகவே, இந்த ஆண்டிற்கான நிதி எவ்வளவு, எத்தனை வீடுகளை முடிக்க இருக்கிறீர்கள், 2024, 2027, 2028 மற்றும் 2029 ஆண்டுகளுக்கான திட்டங்கள் என்ன என்பதையும் தெளிவான செயல் திட்டத்துடன் கால அட்டவணையுடன் இச்சபைக்கு அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெளிவான வேலைத்திட்டம் இருந்தால், இத்தகைய கேள்விகள் எழாது.
எனவே, கௌரவ அமைச்சர் அவர்களே, மேற்கூறிய வீட்டு திட்டங்களை முழுமையாக பூர்த்தி செய்து, அப்பகுதி மக்களுக்கு விரைவாக ஒப்படைக்கும் நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளத் தயாரா? அத்தகைய நடவடிக்கைகள் எப்போது ஆரம்பமாகும், நிறைவு பெறும் காலக்கெடு என்ன என்பதையும் இச்சபைக்கு தெளிவாக அறிவிக்க முடியுமா?
இல்லையெனில், அதற்கான காரணங்களையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக, வவுனதீவு மற்றும் வாகரை போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, இந்த விடயத்திற்கு விசேஷ கவனம் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

No comments: