News Just In

3/21/2026 11:10:00 AM

இந்தியாவிற்குள் நுழைந்த யுத்தம்! டியாகோ கார்சியா தீவில் பல்லிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கள் - ஈரான் அதிரடி

இந்தியாவிற்குள் நுழைந்த யுத்தம்! டியாகோ கார்சியா தீவில் பல்லிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கள் - ஈரான் அதிரடி



ஈரான், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா–பிரித்தானியாவின் இராணுவத் தளமான டியாகோ கார்சியாவை (Diego Garcia) நோக்கி இரண்டு நடுத்தர பல்லிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு பகுதியைத் தாண்டி தனது சக்தியை வெளிப்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது என The Wall Street Journal மேற்கோள் காட்டி அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையின் படி, ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று பறக்கும் நிலையிலேயே செயலிழந்ததாகவும், மற்றொன்றை தடுக்க அமெரிக்கப் போர் கப்பல் SM-3 தடுப்பு ஏவுகணையை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனினும், அந்தத் தடுக்குதல் வெற்றியடைந்ததா என்பது உறுதியாக தெரியவில்லை.இந்த ஏவுகணைகள் எப்போது ஏவப்பட்டன என்பது குறித்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த முயற்சி, ஈரானின் ஏவுகணைத் திட்டம், அது பொதுவாக அறிவித்ததை விட அதிக தூரத்தை எட்டக்கூடியதாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

டியாகோ கார்சியா தளம், ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் (2,500 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: