நான் அண்மையில் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டின் IsabelleMartin அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து விரிவான கலந்துரையாடலைமேற்கொண்டேன்.
அந்த சந்திப்பின் போது, இலங்கையில் தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும்அடிப்படை பிரச்சினைகள் குறித்து நான் தெளிவாக முன்வைத்தேன். காணாமல்ஆக்கப்பட்டவர்களின் நீதி, நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, மனிதஉரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்பு இல்லாமை போன்ற விடயங்கள் இன்னும் தீர்வுகாணப்படாமல் தொடர்வதை நான் சுட்டிக்காட்டினேன்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடுமையான பொருளாதார சவால்களைஎதிர்கொண்டு வருகின்றன என்பதையும், வேலைவாய்ப்பு பற்றாக்குறை, முதலீட்டுஇல்லாமை, மற்றும் போர் பிந்தைய மறுசீரமைப்பு முழுமையடையாத நிலை ஆகியவைஅப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகின்றன என்பதையும்விளக்கினேன்.
இந்த நிலைமையில், தமிழர் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வாக சமஸ்டி
அடிப்படையிலான ஆட்சி அமைப்பு மற்றும் உண்மையான அதிகாரப் பங்கீடு அவசியம்என்பதை நான் வலியுறுத்தினேன்.
அதே நேரத்தில், Canada போன்ற நாடுகள் பல இன, மொழி மற்றும் பண்பாட்டு
பல்வகைமையைக் கொண்ட சமூகங்களில் சமஸ்டி ஆட்சிமுறையின் மூலம் அதிகாரப்பங்கீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன என்பதையும், அந்தஅனுபவங்கள் இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக இருக்க முடியும்என்பதையும் நான் குறிப்பிட்டேன்.
எனவே, இலங்கையில் நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்காக, நீதி,
பொறுப்பேற்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமஸ்டி அடிப்படையிலானஅதிகாரப் பங்கீடு ஆகியவை ஒன்றிணைந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியதுஅவசியம் என்பதை நான் அந்த சந்திப்பில் வலியுறுத்தினேன்.
No comments: