News Just In

3/29/2026 05:56:00 AM

கேரள தேர்தல் பிரச்சாரத்தில் சுவர் விளம்பரம் எழுதும் ரோபோக்கள்

கேரள தேர்தல் பிரச்சாரத்தில் சுவர் விளம்பரம் எழுதும் ரோபோக்கள்




 கேரள தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் மாநிலம் முழு​வதும் சுவர் விளம்​பரம் தீவிரமடைந்​திருக்​கிறது. இதற்​காக ரோபோக்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

கேரளா​வில் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. இந்த தொகு​தி​களுக்கு ஒரே கட்​ட​மாக ஏப்​ரல் 9-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே கடும் போட்டி நில​வு​கிறது.

மூன்று அணி​கள் சார்​பிலும் அதிதீ​விர பிரச்​சா​ரம் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. குறிப்​பாக திரு​வனந்​த​புரம், கொச்சி உள்​ளிட்ட பகு​தி​களில் சுவர் விளம்​பரம் தீவிரமடைந்​திருக்​கிறது. இதற்​காக ரோபோக்​கள் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்த ஷாகிப் கீதாஞ்​சலி, அவரது மனைவி அக்சா பீட்​டர் இணைந்து சுவர் விளம்​பரம் வரை​யும் ரோபோவை உரு​வாக்கி உள்​ளனர். இரு​வரும் மருத்​து​வர்​கள். மருத்​துவ வரைபடங்​களை உரு​வாக்​கு​வதற்​காக "சுவர்​போட்" என்ற பெயரில் அவர்​கள் ரோபோவை தயாரித்​தனர்.

இந்த ரோபோ​வில் இணைக்​கப்​பட்​டிருக்​கும் கணினி​யில் வாசகங்​கள் மற்​றும் படங்​களை பதிவு செய்ய வேண்​டும். இதை அப்​படியே சுவரில் ரோபோ வரைந்​து​விடும். ரோபோ​வில் உள்ள பெட்​டி​யில் தேவை​யான பெயின்ட் கலவையை சேர்க்க வேண்​டும் .

இதுகுறித்து சுவர்​போட் ரோபாவை இயக்​கும் தொழில்​நுட்ப நிபுணர் ஒரு​வர் கூறும்​போது, ‘‘மாநிலம் முழு​வதும் சுவர் விளம்​பரங்​கள் எழுதப்​பட்டு வரு​கின்​றன. ஒரு சுவர் விளம்​பரத்தை வரைய, எழுத ஓவியர்​களுக்கு சில மணி நேரங்​கள் தேவைப்​படும். ஆனால் எங்​களது சுவர்​போட் ரோபோ 20 நிமிடங்​களில் சுவர் விளம்​பரத்தை நிறைவு செய்​யும்.

இதை இயக்க ஒரு நபர் போதும். தற்​போது அனைத்து கட்​சி​யினரும் எங்​களது ரோபோக்​கள் மூலம் சுவர் விளம்​பரங்​களை வரைய முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். ஆனால் எங்​களிடம் போதிய ரோபோக்​கள் இல்​லை. தேவை அதி​கரிப்​ப​தால் அடுத்த ஆண்​டுக்​குள்​ அதி​க ரோபோக்​களை தயாரிப்​போம்​’’ என்​றார்​.

No comments: