News Just In

3/29/2026 05:41:00 AM

சொன்னபடியே இஸ்ரேலை தாக்கிய ஹவுதிக் குழு: செங்கடலில் போர்முனை அபாயம்

சொன்னபடியே இஸ்ரேலை தாக்கிய ஹவுதிக் குழு: செங்கடலில் போர்முனை அபாயம்



ஏமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதிக் குழு இஸ்ரேலை தாக்கியுள்ளதால், செங்கடலில் போர்முனை அபாயம் ஏற்பட்டுள்ளது.
போரில் நுழைவோம்

வெள்ளைக்கிழமையன்று, அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரானுக்கு எதிரான கூட்டணிகளை விரிவுபடுத்தினாலோ, செங்கடலை விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினாலோ அல்லது ஈரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கு எதிரான பதற்றத்தைத் தொடர்ந்தாலோ, தாங்கள் போரில் நுழைவோம் என்று ஹவுதிக் குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணை ஏவப்பட்டதை உறுதி செய்தது.
அத்துடன் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த அச்சுறுத்தலை இடைமறித்ததாகவும் தெரிவித்தன.

இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏமனைச் சேர்ந்த ஹவுதிக் குழுவினர் சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ச்சியான பாலிஸ்டிக் ஏவுகணை

அவர்கள் தங்களது முதல் இராணுவ நடவடிக்கையானது, தொடர்ச்சியான பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேலின் முக்கிய இராணுவத் தளங்களைக் குறிவைத்ததாக கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதல், செங்கடலிலும் அதைச் சுற்றியும் ஒரு புதிய போர்முனை உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

அதே சமயம் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களோ அல்லது அப்பகுதியில் புதிய தாக்குதல் திசை திருப்பல்களோ இன்றுவரை பதிவாகவில்லை.

மத்திய கிழக்கு இடர் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனரான முகமது அல்-பாஷா, இன்றைய தாக்குதல் ஒரு முழு அளவிலான போருக்கான படியாக இல்லாமல், ஒரு சமிக்ஞையாகவே நடத்தப்பட்டது என்றார்.

மேலும், இது அமெரிக்கா அல்லது சவுதி அரேபியாவுடனான ஒரு பரந்த சண்டையில் சிக்காமல், ஹவுதிகள் இராணுவ ரீதியாக செயல்பட அனுமதிக்கும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க கடற்படைக் கப்பல்களை விட, வர்த்தகக் கப்பல்களையே அந்த குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments: