பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்ட புதுமனைகள் திறப்பு
பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்மீள்குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆறு புதுமனைகள்25/03/2026 அன்று திறந்து வைக்கப்பட உள்ளது. 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டவன்முறைகள் காரணமாக முற்றாகஅழிக்கப்பட்ட கிராமம் இதுவாகும்.
278குடும்பங்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் 2023ஆம்ஆண்டு73குடும்பங்கள்குடியேறஅனுமதிக்கப்பட்டது.அடிப்படைவசதிகள் எதுவும் அற்றஇப்பிரதேசத்தில் ஆண்டுகள் இரண்டுகடந்தும் மக்கள் நிரந்தரமாக குடியேறத்தயங்கினர். மேற்படி சூழ்நிலையில் கிழக்கு-குமுகாய மேம்பாட்டு மன்றத்தின் (SAFE) வழிகாட்டலில் சிலஅடிப்படைவசதிகள் மேற்கொள்ளப்பட்டது.குடிநீர் வசதிகள் ,குடியிருப்புமனைகள்இவற்றுள் குறிப்பிடத்தக்கது.
இலங்கை சோசலிச குடியரசின் நிதிஉதவி மற்றும் கலாநிதி சதாசிவம் மகேஷ்வரன் நம்பிக்கை நிதிய பங்களிப்பு என்பவற்றுடன் ஆறு குடியிருப்பு மனைகள் அமைக்கப்பட்டது.மேற்படி குடிமனைகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு 25/03/2026 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இடம் பெறவுள்ளது.
No comments: