நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடம் ஏற்பாடு செய்த 12வது தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச கலை ஆராய்ச்சி கருத்தரங்கம் (SEUIARS–2026) இன்று (31.03.2026 – செவ்வாய்க்கிழமை) கலை மற்றும் கலாச்சார பீட கலை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
கலை மற்றும் கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும் மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஐனோல் மட்சியா பி.டி. சுபைரி பிரதான பேச்சாளராக இணைய வழியில் கலந்து கொண்டு ஆராய்ச்சி சார்ந்த முக்கிய கருத்துகளை முன்வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
இலங்கையின் தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், கருத்தரங்கத்தின் இணைப்பாளர் கலாநிதி சி.எம்.எம். மன்சூர் வரவேற்புரையையும் முதலுரையையும் நிகழ்த்தினார். தொடர்ந்து கலை மற்றும் கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் தலைமையுரையையும், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் சிறப்புரையையும் வழங்கினர். பிரதான பேச்சாளரின் அறிமுகத்தை கருத்தரங்க பொருளாளர் திருமதி ஏ.எப். தஹாரா வழங்கினார்.

இந்நிகழ்வின் நிறைவாக, கருத்தரங்க செயலாளர் கலாநிதி எம்.ஐ. பாத்திமா கரீமா முடிவுரையை வழங்கினார்.
இந்த சர்வதேச கலை ஆராய்ச்சி கருத்தரங்கத்தில் பல்கலைக்கழக பதிவாளர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், நிதியாளர், நூலகர், சிரேஷ்ட உதவி பதிவாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கம் கலை மற்றும் கலாச்சார துறைகளில் ஆராய்ச்சி பரிமாற்றத்தையும் சர்வதேச ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் முக்கிய மேடையாக அமைந்திருந்தது.
No comments: