News Just In

2/15/2026 09:26:00 PM

அவசர பயணமாக இலங்கை வருகிறார் பிரித்தானிய துணைப்பிரதமர் : சிறீதரனையும் சந்திக்க அழைப்பு

அவசர பயணமாக இலங்கை வருகிறார் பிரித்தானிய துணைப்பிரதமர் : சிறீதரனையும் சந்திக்க அழைப்பு




பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி அவசர பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு நாளை மறுதினம் (17) செவ்வாய்க்கிழமை ஒருநாள் பயணமாக வருகை தரவுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வரும் டேவிட் லாமி இலங்கை தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தங்கியிருக்கும் போது பிரித்தானிய துணைப் பிரதமர் தமிழ் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். பிரித்தானிய துணைப் பிரதமரைச் சந்திப்பதற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐ.நா. பணியகத்தில் நடைபெறும் நிகழ்வில் குழந்தைகள் பராமரிப்புக்கான உலகளாவிய பரப்புரைக்கான சாசனம் குறித்த உடன்பாட்டிலும் டேவிட் லாமி கையெழுத்திடுவார்.

பிரித்தானிய துணைப் பிரதமர் லாமி செவ்வாய்க்கிழமை மாலை இலங்கையில் இருந்து புறப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: